விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.