மார்க் ஆண்டனி படம் எப்படி ??? ட்வீட்டர் விமர்சனம் இதோ!

by vignesh

விஷால், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கேங்கஸ்டர்  படமாக இருந்தாலும், முழுக்க முழுக்க காமெடியாகவும், டைம் ட்ராவல் பின்னணியிலும் மார்க் ஆண்டனி உருவாகியுள்ளது. அதேபோல், படத்தின் டைட்டில் கார்டில் தளபதி விஜய்க்கு நன்றி சொன்னதும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘மார்க் ஆண்டனி’ பாஸ் ஆண்டனி எனவும், முதல் பாதி சுமாராக இருந்தாலும், இரண்டாவது பாதி செம்ம ஜாலியாக இருந்ததாக சினிமா விமர்சகர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

மேலும், மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யா தான் செம்ம மாஸ் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எஸ்ஜே சூர்யா டான்ஸ், சில்க் ஸ்மிதா சீன், இடைவேளை காட்சி, ஜாக்கி பாண்டியனின் வால்கிங் சீன் ஆகியவை செம்ம மாஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் மார்க் ஆண்டனி படத்துக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்து வருவதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும் மார்க் ஆண்டனி விஷாலின் ப்ளாக் பஸ்டர் என்றும் விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

அதேபோல், மார்க் ஆண்டனி படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்றும், சில காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாகவும் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு செம்ம மிரட்டலாக இருப்பதாகவும், விஷாலுக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை எனவும், அவரது நடிப்பு ஏமாற்றமே என்றும் கூறியுள்ளார். மார்க் ஆண்டனி முதல் பாதியை விட இரண்டாம் பாதி சூப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாகிவிட்டது என்றும் ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment