ராஜமௌளி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் ஈ.
இப்படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடிக்க நாயகனாக ஈ-யை நடிக்க வைத்தார் இயக்குநர் ராஜமௌலி. மேலும் கிச்சா சுதீப் வில்லன் ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 22 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.