நாயகன் மீண்டும் வரார் எட்டு திக்கும் பயம்தானா !!!

by vignesh

கமல் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் அவரது பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர் 3-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நாயகன்’. இளையராஜா இசையமைதிருந்த இப்படத்தை முகுந்தன் ஸ்ரீனிவாசன் தயாரித்திருந்தார்.  சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி ‘நாயகன்’ படம் நவம்பர் 3-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment