நயன் தாரா நம்பர் 1 எதில் தெரியுமா ???

by vignesh

நயன்தாரா ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி நடிகை நயன்தாரா நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் முலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்.

இந்நிலையில் நயன் தாரா இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார். அதாவது இந்த வாரத்தின் இந்திய அளவில் பிரபலமானவர்கள் யார் என்ற பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டிருக்கிறது. அதன்படி லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்ததாக ஷாருக்கான், தீபிகா படுகோனே, அட்லீ, விஜய் சேதுபதி (9ஆவது இடம்) பிடித்திருக்கின்றனர்.

ஒரே படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்திருப்பதால் கண்டிப்பாக அடுத்தடுத்து அவர் ஹிந்தியில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment