ரவீந்தர் சந்திரசேகருனுக்கு நோ ஜாமின்; எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

by vignesh

ரவீந்தர் சந்திரசேகரன்  16 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர், பிக் பாஸ் விமர்சகர் என வலம் வந்துக் கொண்டிருந்த ரவீந்தர் சந்திரசேகரன் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி பாலாஜி என்பவரிடம் கிட்டத்தட்ட 16 கோடி வரை பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளாராம். அந்த வழக்கில் தான் தற்போது போலீஸார் ரவீந்தரை  தூக்கி உள்ளனர்.

தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பாஸ்போர்ட்களை எல்லாம் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் ரவீந்தர் தரப்பு அளித்த மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் தர மறுத்து உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக ரவீந்தரின் மனைவி மகாலட்சுமி கணவரை ஜாமினில் கூட மீட்க முடியவில்லை என்கிற வேதனையில் வாடி வருவதாக கூறுகின்றனர். மோசடி வழக்கில் ரவீந்தர் சந்திரசேகரன் வசமாக சிக்கியிருப்பதால்  தயாரிப்பாளர் என்ற போர்வையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாரா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் விளாசி வருகின்றனர்.

You may also like

Leave a Comment