அஜித் இப்போது அமைதியாக இருப்பதால் தான் ரஜினி VS விஜய் பஞ்சாயத்து பெரியதாகி உள்ளது. அவர் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வாரிசு படம் வெளியானதில் இருந்தே ரஜினி – விஜய் ரசிகர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ஹூக்கும் பாடலில் பட்டத்த பறிக்க நூறு பேரு உள்ளிட்ட அட்டாக் வரிகள் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் இயக்குநர் பேரரசு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் விஜய்யை வைத்து நான் படம் எடுத்து இருக்கிறேன், இதுவரையில் அவர் கதையிலும், வசனத்திலும் தலையிட்டது இல்லை. அரசியல் வசனங்கள் வருவதற்கு காரணம் இயக்குநர்கள் தான். மேலும், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் ரஜினி, அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் என்று அடுத்தவர்களுக்கு அந்த பட்டத்தை கொடுக்கலாம் ஆனால், மற்றவர்கள் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை எடுத்துக்கொள்வதில் உடன்பாடு இல்லை.
ரஜினி – கமல், அஜித்-விஜய் என்று பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களான அது மாதிரி ரஜினி-விஜய் என்பது பேசுபொருளாகி உள்ளது. தலவந்துவிட்டால் ரஜினி-விஜய் பஞ்சாயத்து சரியாகி விடும் என்றார்.