பிதாமகன் பட தயாரிப்பாளர் மரணம் !

by vignesh

பிதாமகன், கஜேந்திரா  உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. ரஜினியின் பாபா படத்தின்  தயாரிப்பு மேற்பார்வையாளராகவும் பணியாற்றியவர் .

அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

அதை அறிந்த  பல பிரபலங்களும் அவருக்கு உதவினார்கள். சிகிச்சையில் அவரது ஒரு கால் அகற்றப்பட்டு இருந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருக்கும் வீட்டில் அவர் வசித்து வந்தார். இந்நிலையில் வி.ஏ.துரை நேற்று இரவு 9 மணிக்கு மரணமடைந்து இருக்கிறார்.

இவரின் மரணத்திற்கு பல முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment