இலங்கை பிரதமரை சந்தித்த பிரபுதேவா??

by vignesh

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக, நடன இயக்குனராக, இயக்குனராக இருப்பவர் பிரபு தேவா.  இப்போது இவர் அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் முசாசி என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.

பிரபுதேவாவின் முசாசி படக்குழுவினருக்கு இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்ற படக்குழுவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர்.

 

You may also like

Leave a Comment