தளபதி 68 யில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுருவாரோ பிரசாந்த் ???..

by vignesh

தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு பல கண்டிஷன்களை பிரசாந்த் தரப்பு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தனது 25ஆவது படமாக இதை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த்தையும், பிரபுதேவாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறதாம்.  இந்நிலையில் அவர் இந்தப் படத்தில் கமிட்டாவது தொடர்பான புதிய முணுமுணுப்புக்கள் எழ தொடங்கியிருக்கின்றன. அதன்படி பிரசாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் படக்குழுவிடம் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுவருகிறார்கள். அதிலும் தியாகராஜன்,  பிரசாந்த் 30 நாட்களுக்கு கால்ஷீட் கொடுப்பார். அப்போது அவர் நடித்த எந்தக் காட்சியையும் எடிட்டிங்கில் தூக்காமல் படத்தில் வைக்க வேண்டும் என கூறுகிறாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு பிரசாந்த்தை கழற்றிவிட்டுவிடலாம் என்ற எண்ணத்துக்கு விரைவில் வந்தாலும் வரலாம் என்கின்றனர்திரைத்துறையினர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பிரசாந்த் விஜய் படத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தால் அதற்கான வரவேற்பே வேறு மாதிரி இருக்கும். எனவே பந்தா காண்பிக்காமல் கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

You may also like

Leave a Comment