ராகுல் ரவீந்திரன் உடன் இணையும் ராஷ்மிகா மந்தனா!!!

by vignesh

 தமிழில், மாஸ்கோவின் காவிரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராகுல் ரவீந்திரன். இதையடுத்து வணக்கம் சென்னை, தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகிய படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன், தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அங்கு ‘மன்மதடு 2’  படங்களை இயக்கியுள்ள அவர், மீண்டும் படம் இயக்குகிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இதில்  ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருக்கிறார். ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

You may also like

Leave a Comment