ஜெயிலர் படம் வெளியாக இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில், இப்பவே பயில்வான் ரங்கநாதன் தனது ஜெயிலர் பட விமர்சனத்தை போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ஜெயிலர் படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் நிலையில், சமீபத்தில் ஜெயிலர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தை பற்றி சொன்ன பல டாப் சீக்ரெட் தகவல்களைத் தான் ஜெயிலர் விமர்சனமாக பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.
ஜெயிலர் படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தான் யார் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபிப்பார் என்றும் இத்தனை ஆண்டுகளாக பல இண்டஸ்ட்ரி ஹிட்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் மறுபடியும் ஒரு பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக ஜெயிலர் படத்தை கொடுக்கப் போகிறார் என்றும் அவருடன் போட்டிப் போடும் நடிகர்கள் எல்லாமே தெறித்து ஓடப் போகின்றனர் என கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் முதல் முறையாக டார்க் காமெடியில் நடித்துள்ளார் ரஜினிகாந்த் என்றும் இயக்குநர் நெல்சன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய ரஜினிகாந்தை ஜெயிலர் படத்தின் மூலம் காட்ட காத்திருக்கிறார் என்பது உறுதி என பேசியுள்ளார்.