கேம் சேஞ்சர் ஷூட்டிங் ரத்து!!!

by vignesh

இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் ‘இந்தியன் 2’, ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படங்களை இயக்கி வருகிறார். ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராம் சரணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால், 10 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “சில நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக கேம் சேஞ்சர்படத்தின் இந்த மாத ஷெட்யூல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 2-வது வாரம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளது

You may also like

Leave a Comment