ரம்யா கிருஷ்ணன் எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா ?

by vignesh

நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமா, சீரியல் என நடிப்பில் பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

ஜீ தமிழ் சேனலில் வரும் நள-தமயந்தி சீரியலில் நடிக்கிறார்.  வரும்  அக்டோபர் 9ம் தேதி முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. சீரியலின் டைமிங் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன், 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று சிறப்பித்தார். இந்த வயதிலும் பிசியாக நடித்துவரும் ரம்யா கிருஷ்ணன் மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment