சூப்பர் ஸ்டார் ரஜினி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சன் பிக்சர்ஸ் என மெகா கூட்டணியில் உருவாகிறது தலைவர் 171.
அவரது தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கும் இதுவரை தொடங்கவில்லை. ஆனால், அதற்குள்ளாக தலைவர் 171 பட அப்டேட் வெளியானது, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. சன் பிக்சர்ஸ் தான் இந்த அப்டேட்டை விரைவில் வெளியிட முடிவு செய்ததாம்.
அதாவது ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர், சன் குழுமத்திற்கு ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் கிடைத்துள்ளது. அவர்களது பங்குகளை வாங்கிய வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். அவர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே, தலைவர் 171 அப்டேட்டை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ். இதனால், ஷேர் மார்க்கெட்டில் சன் பிக்சர்ஸின் வேல்யூ இன்னும் அதிகரிக்கும் என்பதே இதன் நோக்கமாம். இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.