எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் யார் ??

by vignesh

இந்தம்மா ஏய் எனும் வசனத்தின் மூலம் தான் மட்டும் பிரபலமாகாமல், தான் நடித்த சீரியலையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் நடிகர் மாரிமுத்து .

இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மாரிமுத்து நடித்து வந்த இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை.

You may also like

Leave a Comment