ஜப்பானில் சாய் பல்லவி பட ஷூட்டிங்

by vignesh

சாய் பல்ல இந்தி சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். பாலிவுட் நடிகர் அமீர் கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

‘மகாராஜ்’ என்ற தனது முதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜுனைத் கான்.  தனது இரண்டாவது படத்தில் சாய் பல்லவியுடன் ஜோடி சேர்கிறார் ஜுனைத் கான். சுனில் பாண்டே இயக்குகிறார் .

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு, ஜப்பானில் நடக்க இருக்கிறது. அங்குள்ள சப்போராவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடக்கும் பனி திருவிழா பிரபலம். இந்த திருவிழாவில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இங்கு இதற்கு முன் எந்த இந்திய திரைப்படமும் படமாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment