சலார் ரிலீஸ் தேதி மாற்றம்..,

by vignesh

பிரபாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபுருஷ், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அவரது நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால், தற்போது சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

பிரபாஸுக்கு வில்லனாக மலையாள ஹீரோ பிருத்விராஜ் நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் சலார் படத்தில் நடித்துள்ளனர்.

You may also like

Leave a Comment