‘சலார்’படம் டிசம்பர் 22 ரிலீஸ்..

by vignesh

‘கேஜிஎஃப்’ பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. கடந்த 28-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் பதவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

படத்தின் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ‘சலார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி  வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment