சசிகுமார் இயக்கும் படத்தில் நான் இல்லை சமுத்திரக்கனி!!!

by vignesh

தமிழ், தெலுங்கில் பிசியான நடிகராக இருக்கிறார் சமுத்திரக்கனி. தெலுங்கில் அவர் இயக்கிய ‘புரோ’ வரவேற்பைப் பெற்றதை அடுத்து அங்கு படம் இயக்கவும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

தற்போது ‘ஆர் யூ ஓகே பேபி’ படத்தில் நடித்து இருக்கிறார் . வரும் 22-ம் தேதி இந்தப்படம் வெளியாகும். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்காங்க. .

இந்நிலையில்  சசிகுமார் இயக்கும் குற்றப்பரம்பரை’யில்  நான் இல்லை. அவர் ஷூட்டிங் தொடங்கும்போது நான் வேறுபடங்கள்ல பிசியா இருக்கிறேன். முதல்ல நடிக்கிறேன்னு ஓகே சொல்லிட்டு, பிறகு கால்ஷீட் சிக்கல் வந்துடக் கூடாது இல்லையா? அதனால அதுல நடிக்கலை.என  சமுத்திரக்கனி கூறியுள்ளார்

You may also like

Leave a Comment