பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை சம்யுக்தா தனது வாழ்க்கையில் நடந்த கொடுமையான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்
இதில் ‘என்னுடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வந்ததால், நானும் அவருடன் இருந்தேன். துபாயில் இருந்த போது, எனது கணவர் வேறொரு பெண்ணுடன் நான்கு ஆண்டுகள் உறவில் இருந்தார். இதனால் நான் கொடுமையான வேதனையை அனுபவித்தேன்.
விவாகரத்து செய்ய வேண்டும் என முடிவு எடுத்து அனைத்து ஆவணங்களையும் முறையாக அவருக்கு அனுப்பினேன். ஆனால், அவர் இந்தியா வராமல் எனக்கு மன வேதனையை கொடுத்து வருகிறார் என பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.