நடிகர் அஜித் தான் காதலித்த நடிகை ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2000ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த ஜோடிக்கு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ஷாலினியை அஜித் எவ்வளவு கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலை மூத்தப் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார் அதில் ‘ஷாலினி தந்தை பாபு, தனது மகள் ஷாலினி மற்றும் அஜித் காதலித்து வருவதை அறிந்து, அஜித்திடம் ரூ. 1 கோடி கேட்டுள்ளார். ரூ. 1 கோடி கொடுத்தால் தான் ஷாலினியுடன் திருமணம்’ என கூறியுள்ளார்.
இதற்கு அஜித் சரி என கூறிவிட்டு ரூ. 1 கோடி கொடுத்துவிட்ட பின் தான் ஷாலினியை திருமணம் செய்துகொண்டார் என அந்த மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். ஆனால் இதில் உண்மை இல்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.