சிம்பு தேவன் இயக்கியுள்ள திரைப்படம் போட் . இதில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்காக கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் கானா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடலை கோல்ட் தேவராஜ் என்பவர் எழுதியுள்ளார். இதுபற்றி படக்குழு கூறும்போது, “இந்தப் பாடலை பாட கேட்டபோது அவர் லண்டனில் இருந்தார். அவர் சென்னைத் திரும்பியதும் பாடல் பதிவை முடித்தோம்” என்றனர். இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.