த்ரிஷாவின் ‘தி ரோட்’ படம் எப்ப ரிலீஸ்???

by vignesh

த்ரிஷா நடிக்கும் புதிய படமான ‘தி ரோட்’ (The road), அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை த்ரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இதையடுத்து த்ரிஷா அடுத்ததாக நடிக்கும் படம் ‘தி ரோட்’. மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment