‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு !!!

by vignesh

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘வணங்கான்’ படத்தில் அருண் விஜய்  நடித்து வருகிறார். மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார்.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று (செப்.25) வெளியிட்டுள்ளது. இதில் உடல் முழுவதும் சகதியுடன் அருண் விஜய் வலது கையில் பெரியார் சிலையையும், இடது கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

You may also like

Leave a Comment