தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, காமெடியன் என்பதை தாண்டி ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், சூரியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து, பாராட்டுகளை குவித்தது. கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி நடித்திருந்தார் சூரி.
ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடி வேடத்திலும் நடிப்பேன் என கூறி வரும் சூரி… மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிய காலத்தில், பல கஷ்டங்களை அனுபவித்தவர். தங்குவதற்கு இடம் கூட, இல்லாமல் தவித்த இவருக்கு நடிகர் போண்டா மணி தான், தன்னுடைய வீட்டில் தங்க வைத்து ஆதரவு கொடுத்தார். சில திரைப்படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்று தந்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றிலும் கூறி இருந்தார்.
இப்படி பல கஷ்டங்களை கடந்து, திரையுலகில் சாதித்த, நடிகர் சூரியில் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூரிக்கு சொந்தமாக சென்னையில் 2 வீடு, மற்றும் சென்னையில் ஒரு சில இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு 3 கார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் தன்னுடைய குடும்பத்தினர் உதவியுடன் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார் சூரி. மேலும் காமெடியனாக நடிக்க 1 முதல் 2 கோடி வரை சம்பளம் பெருகிறாராம். மேலும் இவரின் சொத்து மதிப்பு 40 முதல் 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.