மீண்டும் அட்லீயுடன் இணையும் விஜய் …

by vignesh

 ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யுடன் இணைய இருப்பதை இயக்குநர் அட்லீ உறுதி செய்துள்ளார்.

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் மும்பையில் திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் இயக்குநர் அட்லீ ‘ஜவான்’ திரைப்படத்தை பார்த்தார். படம் முடிந்த வெளியே வந்த அவரிடம் ‘இந்தி ரசிகர்கள் விஜய்யை மிகவும் மிஸ் செய்கின்றனர். அவருடன் மீண்டும் இணைவீர்களா?’ என்று கேட்டனர்.  அதற்கு பதிலளித்த அட்லீ, நாங்கள் இதுகுறித்த ஒரு புதிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்  என்று கூறினார்.

You may also like

Leave a Comment