இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நேரத்தில் தனது தந்தை குறித்து விஜய் ஆண்டனி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதில், தனது தந்தை தனக்கு 7 வயது தங்கைக்கு 5 வயது இருக்கும் போது தற்கொலை செய்துகொண்டார் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.