விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தனா இயக்கியுள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். சரண்ராஜ் , கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.