தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றார்கள்.
இருவரும் காதலிக்கின்றார்கள் என்றும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் உலா வருவதுண்டு. ஒரே இடத்தில் இருந்து இருவரும் தனித்தனியாக போட்டோ வெளியிட்டாலும் அதை ரசிகர்கள் தெளிவாக கண்டுபிடித்து அவர்கள் காதலிப்பதால் தான் ஜோடியாக புகைப்படம் வெளியிட தயங்குகிறார்கள் என கிளப்பிவிட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளாக ஹாட் டாப்பிக் ஆக இருந்து வரும் விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வருகிற பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.