1989ஆம் ஆண்டு வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சித்திக்.
இயக்குநராகவும் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதனையடுத்து மலையாள திரையுலகில் வாண்டட் இயக்குநராக மாறினார். தொடர்ந்து படங்களை இயக்கிய அவர் 1999ஆம் ஆண்டு ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார்.
மலையாள ப்ரெண்ட்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். விஜய் , சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரை வைத்த் அதே பெயரில் தமிழிலும் ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. விஜய் மற்றும் சூர்யாவின் கரியரில் முக்கிய படமாக அது அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னை இருந்து வந்த சூழலில் மாரடைப்பும் ஏற்பட்டது. அதனையடுத்து கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
ஒரு நடிகனாக நான் உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார். எங்களுக்கு நீங்கள் அளித்த நினைவுகளும் அன்பும், எங்களை முன்னோக்கி அழைத்து செல்லும்” என குறிப்பிட்டு சித்திக் மறைவுக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துவிட்டார்.
ஆனால் விஜய் ஏன் சொல்லவில்லை. வளர்ந்த பிறகு வளர்த்துவிட்டவரை மறந்துவிட்டாரா விஜய் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.