விஜய் சேதுபதியின் 50வது படத்துக்கு ‘மகாராஜா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ’மகாராஜா’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் இடிந்த நிலையில் காணப்படும் ஒரு இடத்தில், சலூன் நாற்காலியில் விஜய் சேதுபதி அமர்ந்துள்ளார். கையில் ரத்தம் தோய்ந்த பட்டா கத்தி ஒன்றை வைத்துள்ள அவரது உடல் முழுவதும் ரத்தக் கறை உள்ளது. காது அறுபட்டு கட்டு போடப்பட்டுள்ளது. இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கலாம் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே தெரிந்து கொள்ள முடிவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.