கோவத்தில் வெற்றிமாறன்; டிமிக்கி கொடுக்கும் விஜய்சேதுபதி!!!

by vignesh

நடிகர் விஜய்சேதுபதி விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு கால்ஷூட் கொடுக்காமல் தாமதமாக்கி வருவதால், வெற்றிமாறன் கோவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நாயகன் சூரியையும் கிராம மக்களையும் சுற்றி நிகழுவது போல படத்தின் கதையம்சம் இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்ட அம்சங்கள் காண்பிக்கப்பட உள்ளன.

விடுதலை இரண்டாம் பாகத்திலும் சில புதிய கதாப்பாத்திரங்கள் வரவுள்ளன. அதிலும் முக்கியமாக விஜய் சேதுபதியின் மனைவி கதாப்பாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். விஜய்சேதுபதி, கால்ஷீட் பிரச்சனையால் விடுதலை படப்பிடிப்பில் இன்னும் கலந்து கொள்ளவே இல்லையாம். இதனால் தான் இப்போது இந்த படப்பிடிப்பு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

சூரியின் கதாபாத்திரம் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. இந்த படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் கவனம் செலுத்தலாம் என்று நினைத்தால், இன்னும் விடுதலை 2கதையே முடியாமல் ஜவ்வுபோல இழுத்துக்கொண்டே இருப்பதால் வெற்றிமாறன் கடும் கோவத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment