‘‘ஒரே ஃப்ரேம்; இரண்டு லெஜண்டுகள்’’

by vignesh

எம்.எஸ்.தோனியும், மோகன்லாலும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி தயாரிப்பில் அண்மையில் வெளியானது ‘எல்ஜிஎம்’. மற்றொருபுறம்  மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மலைகோட்டை வாலிபன்’ அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் அவரவர் துறையில் சிறந்து விளங்கும் இந்த இருவரும் இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ‘ஒரே ஃப்ரேம்… இரண்டு லெஜண்டுகள்’ என ரசிகர்கள் கேப்ஷனிட்டுள்ளனர். மோகன்லாலும் – தோனியும் இண்டிகோ பெயிண்ட்ஸ் விளம்பரத்துக்காக ஒன்றிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment