பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், உட்பட பலர் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. வரும் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தைத் தள்ளி வைத்துள்ளதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்தது.
இதற்கிடையே படத்தின் சில காட்சிகளை, ரீ-ஷூட் செய்ய பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளார். அதில் ஒன்று, கிளைமாக்ஸ் காட்சி. இதனால், இதன் ரிலீஸ் மேலும் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது