ஏ.ஆர்.முருகதாஸ்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்..,,

by vignesh

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் முருகதாஸை டேக் செய்து , எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment