நகைச்சுவை ஜாம்பவானாக அறியப்படும் சார்லி சாப்ளினின் மகளும், நடிகையுமான ஜோசஃபின் சாப்ளின் ஜூலை 13ம் தேதி உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகார பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர்.
சார்லி சாப்ளினின் மகளும், நடிகையுமான ஜோசஃபின் சாப்ளின்… மார்ச் 28, 1949 இல், கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் பிறந்தார். இளம் வயதிலேயே தனது தந்தை நடிப்பில், 1952 ஆம் ஆண்டு வெளியான ‘லைம்லைட்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய ஜோசஃபின் நீண்ட இடைவெளிக்கு பின்னர், 1976 ஆம் ஆண்டு வெளியான, A Countess from Hong Kong என்கிற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
20திற்கும் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ள ஜோசஃபின் சாப்ளின், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
தற்போது 74 வயதாகும், ஜோசஃபின்னுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் சமீப காலமாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் இன்றி அவதிப்பட்டு வந்த இவர், ஜூலை மாதம் 13ம் தேதி உயிரிழந்துவிட்டதாக, அவரின் குடும்பத்தினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த தகவல் ஜோசஃபின் சாப்ளின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.