‘சிறுத்தை சிவா’ இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சூர்யாவின் பிறந்த நாளன்று அவர் சுதா கொங்கராவுடன் இணையும் புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பை விமான நிலையத்துக்கு தனது மகன் தேவ்வுடன் சென்றார். அப்போது அங்கிருந்த ஊடகத்தினர் அவரை புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். அவர்களிடம் ‘‘என் மகனைப் புகைப்படம் எடுக்கவேண்டாம்” என கோரிக்கை வைத்தார். அவர்களும் கோரிக்கையை ஏற்று சூர்யாவை மட்டும் புகைப்படம் எடுத்தனர்.